வளைகுடா பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலை கருத்திற்கொண்டு, சர்வதேச கடற்பரப்பில் தொழிலில் ஈடுபடும் எமது நாட்டின் பலநாள் மீன்பிடிப் படகுகளின் பாதுகாப்புத் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த தெரிவித்தார்.
உலகில் தற்போது நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக, சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.
வட மாகாண அபிவிருத்திப் பணிகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கையின் கடற்றொழில் துறையை மேம்படுத்துவது தொடர்பாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நோர்வே நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் மோட்ஸ்ஃபெல்ட் கிராவிக் (Hon. Andreas Motzfeldt Kravik) ஆகியோருக்கிடையில் விசேட இருதரப்பு கலந்துரையாடல் இன்று (04) கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
"மீன்பிடித் துறைமுகங்களுக்கு வரும் மக்கள் புன்னகையுடன் வெளியேறும் வகையிலான சேவையை வழங்குங்கள்" - பிரதி அமைச்சர் ரத்ன கமகே
மீனவ சமூகத்திற்கு மிகவும் வினைத்திறனான மற்றும் துரித சேவையை வழங்கும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் தரவு முறைமை (MSDFAR) மற்றும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டைத் தரவு முறைமை (DRP) ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (03) ஆட்பதிவுத் திணைக்களத்தில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்
- நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் : காங்கேசன்துறையிலிருந்து கற்பிட்டி வரை மீன்பிடி நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் – கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அவசர அறிவிப்பு
- சமுத்திரப் பாதுகாப்பிற்கான சவால்களை வெற்றிகொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் - ஜப்பானில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
- ஹம்பாந்தோட்டை மீனவ சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை : நிவாரணப் பொதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து பிரதி அமைச்சர் ரத்ன கமகேவிடமிருந்து விசேட அறிவுறுத்தல்கள்





