en banner

WhatsApp Image 2026 03 18 at 17.10.59தென் மாகாணத்தின் கடல் மற்றும் நன்னீர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 86 இலட்சம் ரூபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் மீன் விற்பனை கொள்கலன்களை வழங்கும் விசேட திட்டமொன்று கடந்த மார்ச் 13ஆம் திகதி மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. இதற்கான நிதி ஒதுக்கீடுகளை தென் மாகாண கடற்றொழில் அமைச்சு வழங்கியிருந்தது.

WhatsApp Image 2026 03 13 at 23.18.00 9'திட்வா' புயலால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் 11ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

IMG 9626குருநாகல் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (11) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

WhatsApp Image 2026 03 17 at 16.15.59"திட்வா" (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மீனவ சமூகத்திற்கு 26.9 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இணையாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கடந்த 11 ஆம் திகதி வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

Puttalam17புத்தளம் மாவட்டத்தில் கடற்றொழில் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் திரு. ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இரண்டாவது மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (11) புத்தளம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகள்

Youtube