en banner

WhatsApp Image 2026 04 22 at 14.12.38நோர்வேயின் பெர்கன் (Bergen) நகரில் நடைபெற்று வரும் ‘One Ocean Week’ சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், பெர்கன் மாகாண சபைத் தலைவி (Chief of County Council) கிறிஸ்டின் பி. மேயர் (Christine B. Meyer) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுடன் நேற்று (21) விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

WhatsApp Image 2026 04 22 at 11.35.58

நோர்வேயின் பெர்கன் (Bergen) நகரில் நடைபெற்று வரும் ‘One Ocean Week’ சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர், உலகின் முன்னணி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் மீன் தீவன உற்பத்தி நிறுவனமான கார்கில் (Cargill) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தர்ஜே ஈட் (Tarjei Eide) உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகத்தினருடன் நேற்று (21) விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

WhatsApp Image 2026 04 18 at 14.10.05நார்வேயின் பேர்கன் (Bergen) நகரில் நடைபெற்று வரும் ‘One Ocean Week’ சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், நார்வேயின் மிகப்பெரிய கடல் உணவு, நீரியல் வளர்ப்பு மற்றும் பதப்படுத்துதல் நிறுவனமான லெரோய் (Lerøy Seafood Group) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹெனிங் பெல்டெஸ்டாட் (Henning Beltestad) அவர்களை நேற்று (17) சந்தித்து விசேட கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

WhatsApp Image 2026 04 21 at 08.44.13அரபுக் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டுச் செல்லும் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு மீண்டும் கரை திரும்பும் அனைத்து பலநாள் மீன்பிடிக் கலன்களும், மாலைதீவின் பிரத்தியேக பொருளாதார வலயத்தை (EEZ) கடக்கும்போது பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

 DSC1239 copy.jpgஇந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு எமது கலாசார அடையாளத்தையும் தேசிய சகோதரத்துவத்தையும் உலகிற்கு பறைசாற்றும் ஒரு உன்னதமான சந்தர்ப்பமாகும். நீலக்கடலோடு போராடி தேசிய பொருளாதாரத்திற்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் முன்னோடிகளாக விளங்கும் எமது கடற்றொழில் சமூகத்திற்கு, இந்த மாறுதல் காலம் உண்மையிலேயே புதிய எதிர்பார்ப்புகளைக் கொண்டுவரும் ஒரு காலப்பகுதியாக அமையும் என நான் நம்புகிறேன்.

சமீபத்திய செய்திகள்

Youtube