
"எமது இலக்கு, மீனவ சமூகத்திற்கு சுபீட்சத்தையும் கௌரவத்தையும் பெற்றுத் தரும் ஒரு வளமான எதிர்காலமாகும்"

பேரிடரால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மீண்டெழுவதற்கு நாம் தீவிரமாக முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். இருந்த நிலையைவிட சிறந்த நிலைக்கு செல்வோம். அதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவப் பெருமக்களுடன் இணைந்து, சமாதானத்தின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் இந்த உன்னத தருணத்தில், உங்கள் அனைவருக்கும் சமாதானமும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய நத்தார் உதயமாகட்டும் என இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் கடற்றொழில் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது குறித்து, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு மெத்யூ டக்வொர்த் அவர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
கிறிஸ்துமஸ் திருநாள் அன்பு, சமாதானம், கருணை மற்றும் நம்பிக்கையின் உலகளாவிய செய்தியுடன் மனித குலத்தின் இதயங்களை ஒன்றிணைக்கும் புனிதமான நாளாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் சுழியோடிகளின் தொழில்சார் அபாயங்களை உள்ளடக்கிய புதிய காப்புறுதித் திட்டம் : பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் கற்பிட்டியில் ஆரம்பம்
- தற்போதைய மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டின் பல துறைகள் கடுமையாக
- மத்திய கிழக்கு நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு விசேட கொடுப்பனவு : அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஜனாதிபதி இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து இன்று அமைச்சரவையில் தீர்மானம்
- இலங்கை - சீனாவிற்கு இடையிலான கடல்சார் அறிவியல் மற்றும் கடற்றொழில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை - பிரதி அமைச்சர் ரத்ன கமகே சீனாவில் தெரிவிப்பு
- பங்களாதேஷில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை மீனவர்கள் 8 மாதங்களின் பின்னர் விடுதலை





