இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் ஜப்பான் வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் திரு.ISOMATA Akio தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் தென் கொரிய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட “வினைத்திறனான உயிரியல் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக ஸ்மார்ட் மற்றும் நிலையான நீரியல் வளர்ப்பு” (Smart and Sustainable Aquaculture) எனும் நான்கு வருட கால செயற்திட்டத்தின் நிறைவு விழா நேற்று (12) கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
ரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடவலவ நீர்த்தேக்கத்தில் கடந்த மே 09 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் மாத்திரம் 35,000 கிலோகிராமிற்கும் அதிகமான (35,469 kg) பாரிய மீன் அறுவடை கிடைத்துள்ளதாக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) அறிவித்துள்ளது.
நாட்டின் வடகிழக்கு திசையில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, கடலோரக் கடல் பகுதிகளில் காலநிலை சீரற்றதாகக் காணப்படலாம் என்பதால், கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், அனைத்து மீனவர்களும் உயிர் காப்பு அங்கிகளை (Life Jackets) அணிவது கட்டாயமெனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவிற்கு மீன் மற்றும் மீன் சார்ந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் போது அந்நாட்டின் "கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்புச் சட்டத்தின்" (Marine Mammal Protection Act - MMPA) கீழ் விதிக்கப்பட்டிருந்த கடுமையான நிபந்தனைகளை இலங்கை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது.
சமீபத்திய செய்திகள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்
- நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் : காங்கேசன்துறையிலிருந்து கற்பிட்டி வரை மீன்பிடி நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் – கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அவசர அறிவிப்பு
- சமுத்திரப் பாதுகாப்பிற்கான சவால்களை வெற்றிகொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் - ஜப்பானில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
- ஹம்பாந்தோட்டை மீனவ சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை : நிவாரணப் பொதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து பிரதி அமைச்சர் ரத்ன கமகேவிடமிருந்து விசேட அறிவுறுத்தல்கள்





