“சுதந்திரத்தைக்கூட விலைபேசி விற்கும் இருண்ட யுகத்தில் இருந்து தற்போதே விடிவை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். நிச்சயம் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் நாள் விரைவில் உதயமாகும்.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் பாலி (Bali) நகரில் நேற்று (30) ஆரம்பமான கரையோர நாடுகளின் கூட்டணியின் 30வது அமர்வில் (30th Session of the Coastal States Alliance - CSA 030) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித கமல் ஜினதாச அவர்களும் விஜயம் செய்துள்ளனர்.
14 கோடி ரூபா பெறுமதியான மொரிஷியஸ் நாட்டுக்கு அனுப்பப்படவுள்ள படகை பார்வையிட்டார்
வரலாற்றில் முதன்முறையாக அமைச்சரொருவர் பட்டினங்கல மீன்பிடி இறங்குதுறைக்கு நேரில் விஜயம்
திட்வா (Ditwah) மற்றும் வெள்ளப் பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நன்னீர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக, 226 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான நிதி நிவாரணங்களை வழங்கும் அரச நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் இன்று (23) நாரஹேன்பிட்டியில் உள்ள கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது மீனவர்களுக்கு நிதி உதவிக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் துறையில் டிஜிட்டல் புரட்சியின் ஆரம்பம்!
- பேருவளையில் புதிய படகு இறங்குதளம் திறப்பு: 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய பாதை திறக்கப்படுகிறது - அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்த ஜப்பானிடமிருந்து 200 மில்லியன் ரூபா பெறுமதியான 06 குளிரூட்டப்பட்ட வாகனங்கள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்





