ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் தொழில்சார் மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளை இனம் கண்டு, அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நேற்று (04) ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்பான் கடற்றொழில் ஆராய்ச்சி மற்றும் கல்வி முகவரகத்தின் (Japan Fisheries Research and Education Agency - FRA) உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த 02ஆம் திகதி ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்றது.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் (State Minister of Agriculture, Forestry and Fisheries) நெமோட்டோ யுகினோரி (Hon. NEMOTO Yukinori) அவர்களுக்கும் இடையிலான கொள்கை ரீதியிலான விசேட கலந்துரையாடல் நேற்று (02) டோக்கியோ நகரில் அமைந்துள்ள ஜப்பானிய கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், உலகின் முன்னணி தொண்டு நிறுவனங்களில் ஒன்றான ஜப்பானின் நிப்போன் பவுண்டேஷனின் (The Nippon Foundation / Sasakawa Foundation) தலைவர் யோஹேய் சசகாவா (Mr.Yohei Sasakawa) அவர்களுக்கும் இடையிலான விசேட உத்தியோகபூர்வ சந்திப்பொன்று கடந்த 02ம் திகதி டோக்கியோவில் நடைபெற்றது.
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ‘தீவு நாடுகளின் கடல்சார் மாநாட்டில்’ (Island States Ocean Summit - ISOS) கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் (JICA) உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (02) ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- ஹம்பாந்தோட்டை மீனவ சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை : நிவாரணப் பொதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து பிரதி அமைச்சர் ரத்ன கமகேவிடமிருந்து விசேட அறிவுறுத்தல்கள்
- இலங்கையின் கடற்றொழில் தொழிற்துறையை நவீனமயமாக்குவதற்கு ஜப்பானின் முன்னணி ஆய்வு நிறுவனமான FRA இன் தொழில்நுட்ப உதவி - கூட்டு ஆய்வுக்காக ஜப்பானிய விஞ்ஞானிகளை இலங்கைக்கு வருமாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அழைப்பு விடுத்துள்ளார்.
- இலங்கையின் கடல்சார் அறிவியல் மற்றும் கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்கு நிப்போன் பவுண்டேஷன் (The Nippon Foundation) முழு ஆதரவு - தலைவர் யோஹேய் சசகாவா மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையில் டோக்கியோவில் விசேட சந்திப்பு
- இலங்கையின் கடற்றொழில்துறை பட்டதாரிகளுக்கு ஜப்பானில் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவதற்கும் ஜப்பானிய அரசாங்கத்துடன் விசேட உடன்பாடு - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஜப்பானில் தெரிவிப்பு
- இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவதற்கு ஜப்பானின் 'ஜைகா' (JICA) நிறுவனம் முழுமையான ஆதரவு : கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், இத்துறையின் குறைபாடுகளைக் கண்டறிவதற்கும் விசேட உடன்பாடு - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஜப்பானில் தெரிவிப்பு





